Latestமலேசியா

பண்டார் உத்தாமா பள்ளியில் கொலை; நிர்வாகம் பணியிட மாற்றம்; மகனால் இடிந்துபோன தந்தை

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15,

பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் நான்காம் படிவ மாணவி இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தால் நாடே துயரத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் தற்காலிகமாக மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசாரணை முடியும் வரை இந்த மாற்றம் அமுலில் இருக்கும்; அதே சமயம் கற்றல் – கற்பித்தல் வழக்கம்போல் தொடரும் என்றும் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சு கூறியது.

இவ்வேளையில், சந்தேக நபரின் தந்தை, மகனின் செயலால் மனமுடைந்து போயிருப்பதோடு, கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.

“என் மகன் இதைச் செய்திருக்கிறான் என நினைக்கும் போதே என் மனம் குமுறுகிறது… பாதிக்கப்பட்ட குடும்பத்தை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை” என செய்வதறியாது அவர் வேதனையில் புலம்பினார்.

நேற்று காலை 9.10 மணியளவில் பெண்கள் கழிப்பறைக்கு வெளியே நிகழ்ந்த அக்கொடூர சம்பவத்தில்,16 வயது மாணவியை, 14 வயது அம்மாணவன் சரமாரியாகக் கத்தியால் குத்தினான்.

பின்னர் போலீஸார் அவனிடமிருந்து 2 கூர்மையான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கொலைக்கான உண்மைக் காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், ‘காதல் நிராகரிப்பு’ கோணத்தை ஆராய்ந்தாலும், அதை இப்போதே உறுதிச் செய்வது சரியாக இருக்காது என்றும் அவர்கள் கூறினர்.

இத்துயரச் சம்பவத்திற்குப் பிறகு, கல்வி அமைச்சு மனநல ஆலோசகக் குழுக்களை பள்ளிக்கு அனுப்பி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனநல ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!