Latestஅமெரிக்கா

பதவியேற்ற 5 நாட்களில் நீக்கம்; ட்ரம்பின் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் பதவி பறிப்பு

வாஷிங்டன், அக்டோபர்-17,அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளராக நியமிக்கப்பட்ட Katie Zacharia, பதவியேற்ற ஐந்தே நாட்களில் நீக்கப்பட்டுள்ளார்.

42 வயதான Zacharia, கடந்த திங்கட்கிழமை பணியைத் தொடங்கிய நிலையில், அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

குறிப்பாக, தம்மை ஒரு வழக்கறிஞராக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்குத் தேவையான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்தது.

சட்டக் கல்வியில் பட்டம் பெற்றிருந்தாலும், அவர் வழக்கறிஞர் உரிமம் பெற்றதற்கான பதிவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது.

இதையடுத்து, ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களால் Zacharia பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ட்ரம்ப், அவர் பதவியில் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது Zacharia பதவியிலிருந்து நீக்கப்பட்டதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலம் பதவி வகித்த வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளராக அவர் திகழ்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!