பத்து பாஹாட், அக்டோபர் 2 – பத்து பாஹாட்டில் அண்டை வீட்டை எரித்து விடுவதாக மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட விவசாயி ஒருவருக்கு, இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாதக் காலச் சிறைத்தண்டனையை விதித்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றின்படி, அண்டை வீட்டுக்காரரான 84 வயது முதியவர், இயற்கைக்கும் அப்பாற்பட்ட ‘toyol’ ஒன்றை வளர்த்து, தனது வீட்டில் உள்ள பணத்தைத் திருடியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த 51 வயதான அந்த விவசாயி, அண்டை வீட்டாரின் வீட்டை எரித்து விடுவதாக மிரட்டியதை, ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டவர் முன்னதாக போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.