
பத்து பஹாட், ஆகஸ்ட்-26,ஜோகூர், பத்து பஹாட் கடற்பகுதியில் நேற்று மாலை 4.12 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1-ராகப் பதிவான இலேசான நில அதிர்வு உணரப்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia வெளியிட்ட தகவலின்படி, இந்த நில அதிர்வு 10 கிலோ மீட்டர் ஆழத்தில், பத்து பஹாட்டிலிருந்து தென்மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
எனினும், இந்த நில அதிர்வால் மலேசியாவுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என MET Malaysia உறுதிப்படுத்தியது.
நில அதிர்வை உணர்ந்த பொது மக்கள், வானிலை ஆய்வு மையத்தின் இணையவழி கருத்துக்கணிப்புப் படிவத்தை பூர்த்திச் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



