Latestமலேசியா

பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள்; உடனே புகாரளியுங்கள் – கல்வி அமைச்சு வலியுறுத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – பள்ளிகளில் நடைபெறும் பகடிவதை மற்றும் தவறான நடத்தைகள் தொடர்பான புகார்களை உடனடியாக அளிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்த அமலாக்கத்தின் வழி பகடிவதை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க இயலும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், அமைச்சின் பகடிவதை புகார்கள் அமைப்பின் மூலம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் முக்கிய தகவல்களைச் சேர்த்து அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என கூறியுள்ளது.

விசாரணை நடத்தப்படுவதற்கு சம்பவம் நடந்த தேதி, நேரம், இடம், குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர் ஆகிய விவரங்கள் புகாரில் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புகாராளர்கள் பெயரை வெளியிடாமல் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்களைச் சமர்ப்பிக்கக்கூடிய எண்கள்:
📞 03-8884 9325 (தொலைபேசி அழைப்பு)
📱 014-800 9325 (தொலைபேசி அழைப்பு & புலனம்)

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!