Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய ஆடவன் கைது

மும்பை , ஜன 20 – இந்தியாவில் மராட்டிய மாநிலம், தானேயில் ( Thane) பாலிவுட் (Bollywood ) நடிகர் சைஃப் அலிகானை ( Saif Ali Khan) அண்மையில் அவரது வீட்டில் கத்தியால் குத்திய ஆடவன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டான் .

முகமட் அலியான் ( Mohammed Aliyan) என்ற அந்த சந்தேக நபர் சைஃப் அலி கான் இல்லத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் Kasarvadavaliயில் உள்ள ஹிராநந்தனி (Hiranandani) தோட்டத்திற்கு அருகில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான் .

பிடிபடுவோம் என்ற பயத்தில் சம்பந்தப்பட்ட நபர் விஜய் தாஸ் (Vijay Das ) என்ற போலி பெயரை பயன்படுயுள்ளான். அவன் ( Thane ) யில் உள்ள மதுபான விடுதியில் நிர்வாக ஊழியராக பணியாற்றி வந்துள்ளான்.

இந்த சம்பவத்தின் போது 54 வயதான சைஃப் அலிகானின் ( Saif Ali Khan) கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் பலமுறை குத்தப்பட்டதில் காயம் அடைந்தார்.

பாந்த்ராவில் (Bandra) உள்ள அவரது வீட்டில் திருட நுழைந்தபோது கடந்த வியாழன் அதிகாலையில் தனிப்பட்ட ஆடவன் ஒருவன் தாக்குதல் நடத்தினான்.

சைஃபர் அலி கான் ( Saif Ali Khan) ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டு லீலாவதி (Lilavati ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது முதுகெலும்பில் இருந்து 2.5 அங்குல நீளமுள்ள பிளேடு அகற்றப்பட்டது. அவர் படிப்படியாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!