
சிரம்பான், மே 20- கடந்த பிப்ரவரி மாதம், நெகிரி செம்பிலான் மந்தினில், தனது ஒரு வயது எட்டு மாத பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொன்ற, 35 வயது பெண் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில், தனது குற்றத்தை மறுத்த அப்பெண்ணை, ஜோகூர் பாரு பெர்மாய் மருத்துவமனையில் மனநல பரிசோதனைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட்டுக்கு அபராதமும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து, மனநல மதிப்பீட்டின் முடிவுகளுக்குப் பின் ஜூன் 19 ஆம் தேதி வழக்கு தொடருமென்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.