Latestமலேசியா

பினாங்கில் TNB கேபிள்களைத் திருடி வந்த ஆடவனைத் துரத்திச் சென்று கைதுச் செய்த போலீஸ்

ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-26,பினாங்கு, ஜியோர்ஜ்டவுனில் TNB கேபிள்களைத் திருடிய சந்தேக நபரின் காரை நிறுத்த, போலீசார் துப்பாக்கி வேட்டுகளை கிளப்ப வேண்டியதாயிற்று.

ஜாலான் கெலாவியில் நேற்று மாலை 5.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

காரை நிறுத்தாமல், போலீஸ் மற்றும் பொது மக்களின் வாகனங்களை அவன் மோதியதை அடுத்து, அக்காரின் முன்பக்க டயர்களை நோக்கி போலீஸ் இரு முறை சுட்டது.

இதனால் 200 மீட்டர் தொலைவில் அந்த Honda Civic கார் தானாக நிற்க, காரிலிருந்து இறங்கி அவன் ஓட்டம் பிடித்தான்.

சுமார் 500 மீட்டர் தூரம் ஓடியவனை Solok Midlands போலீசார் கைதுச் செய்தனர்.

சம்பவத்தின் போது Plaza Gurney அருகேயுள்ள TNB துணை மின் நிலையத்தில் கேபிள்களைத் திருட 32 வயது அவ்வாடவன் திட்டமிட்டிருந்தான்.

புதன்கிழமை நடந்த கேபிள் திருட்டு சம்பவத்திற்கும் அவனே காரணம் என போலீஸ் சந்தேகிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!