Latestமலேசியா

பிற மதச் சடங்குகளில் பங்கேற்ற முஸ்லீம் இளைஞர்; குடும்பத்தினருடன் பகிரங்கமாக மனம் திருந்தினார்

கோம்பாக், நவம்பர்-6,பிற மதத்தின் வழிபாட்டுச் சடங்குகளில் பங்கேற்று சர்ச்சையை ஏற்படுத்திய 21 வயது முஸ்லீம் இளைஞர், தனது தாயார் மற்றும் தங்கையுடன் இணைந்து பகிரங்கமாக மனம் திருந்தியுள்ளார்.

Aliff Daniel Adli என்ற அந்த இளைஞர், ஷா ஆலம், சுல்தான் சலாஹுடின் அப்துல் அசிஸ் ஷா பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு மனம் திருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராண்டுகளுக்கு முன்னர் Danie பத்து மலையில் அலகுக் குத்தி, பால் குடம் ஏந்திய படங்களும் வீடியோவும் அண்மையில் வைரலானது.

இந்நிலையில், பிற மதத்தின் வழிபாட்டு முறைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கோம்பாக் பாராட் ஷரியா கீழ் நிலை நீதிமன்றத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உலு யாமில் உள்ள Baitul Iman நம்பிக்கை மறுசீரமைப்பு மையத்தில் 3 மாதங்கள் மறுவாழ்வு பயிற்சி பெறுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையான JAIS ஏற்பாட்டில், Istitabah எனப்படும் பகிரங்க மனமாற்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.

அவருடன் அவரது 52 வயது தாயாரும், 19 வயது தங்கையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!