Latestஉலகம்

பிலிப்பின்ஸ் சென்ற டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து அனுப்பப்படவில்லை; MTEN தகவல்

புத்ராஜெயா, ஏப்ரல்-12-பிலிப்பின்ஸ் நோக்கி அனுப்பப்பட்ட 329,000 டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து சென்றவை அல்ல என, தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN தெளிவுப்படுத்தியுள்ளது.

சில வெளிநாட்டு ஊடகங்கள், இந்த டீசல் மலேசியாவிலிருந்து வந்ததாக செய்தி வெளியிட்ட நிலையில், MTEN அதனை திட்டவட்டமாக மறுத்தது.

எனவே, பொது மக்கள் யூகங்களைக் கிளப்பாமல், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு அது வலியுறுத்தியது.

முன்னதாக, பிலிப்பின்ஸில் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்கும் பொருட்டு, மலேசியாவிலிருந்து 52.311 மில்லியன் லிட்டர் அல்லது 329,000 தோம்புகளில் டீசல் வந்துசேர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியிருந்தன.

மார்ச்சில் ஜப்பான் 22.578 மில்லியன் லிட்டர் டீசலை அனுப்பியதாகவும் ஏப்ரலில் மலேசியா அனுப்பியதாகவும் அவை தெரிவித்திருந்த நிலையில், MTEN இந்த மறுப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!