Latestமலேசியா

புகழ்பெற்ற வர்த்தக முத்திரை என்ற பெயரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை ; தெமர்லோவில் பெண் கைது

தெமர்லோ, ஏப்ரல் 26 – சந்தையில் புகழ்பெற்ற வர்த்தக முத்திரை எனக் கூறி இணையத்தில்
போலிப் பொருட்களை விற்று வந்த 31 வயது உள்ளூர் பெண்ணொருவர் பஹாங்,தெமர்லோ,Taman Keladan Baiduriயில் கைதாகியுள்ளார்.

வர்த்தக முத்திரைத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைக்காக 2019 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 1,000 ரிங்கிட்டாக இருக்கும் என மதிப்பிடப்படுவதாக, உள்நாட்டு வாணிப-வாழ்க்கைச் செலவின அமைச்சின் தெமர்லோ கிளையின் தலைமை அமுலாக்க அதிகாரி
Abdul Razak Yahaya கூறினார்.

வீட்டை, விற்பனைத் தளமாகவும் பொருட்களை வைக்கும் கிடங்காகவும் மாற்றி அப்பெண் அவ்வேலையைப் பார்த்து வந்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் விற்கப்படும் போலி முத்திரையிலான பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கி, அவற்றின் அளவு, வடிவம் மற்றும் ரகத்தைப் பொருத்து 70 ரிங்கிட் வரையில் online-னில் விற்று அவர் காசு பார்த்து வந்துள்ளதாக Abdul Razak கூறினார்.

இது சட்டத்திற்கு எதிரானது எனக் கூறிய அவர், அவ்வாறு செய்பவர்கள் பிடிபட்டால் வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் கடும் தண்டனைக் காத்திருப்பதாக எச்சரித்தார்.

தனிநபர்களுக்கு அதிகபட்சமாக, விற்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் மற்றும் மூன்றாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அதே நிறுவனங்கள் என்றால், ஒவ்வொரு பொருளுக்கும் 15 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!