Latestமலேசியா

புக்கிட் அந்தாராபங்சாவில் போலீஸ் துரத்தலுக்குப் பின் இருவர் கைது; ஆயுதங்கள், கேபிள் திருடும் கருவிகள், போதைப்பொருள் பறிமுதல்

அம்பாங், அக்டோபர்-12,அம்பாங் ஜெயா, புக்கிட் அந்தாராபங்சாவில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற இரு ஆடவர்கள், நீண்ட துரத்தலுக்குப் பின்னர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

Jalan Wangsa Lima-விலிருந்து MRR2 நெடுஞ்சாலை வழியாகத் தப்பியோடிய சந்தேக நபர்களை, போலீஸார் பொது மக்களின் உதவியுடன் துரத்திப் பிடித்தனர்.

அவர்கள் பயணித்த Isuzu D-Max வாகனம், செத்தியாவங்சாவில் ஜாலான் ஜெலாத்தேக் மற்றும் ஜாலான் தாமான் செத்தியாவங்சா சந்திப்பில், Caltex பெட்ரோல் நிலையத்திற்கு அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.

வாகனத்தைச் சோதனையிட்டதில், பாராங் கத்தி, அரிவாள், பாதாளச் சாக்கடை மூடியைத் திறக்கும் கருவி உள்ளிட்ட கேபிள் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதை, அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP கைருல் அனுவார் காலிட் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, பொது மக்களின் வாகனங்களை மோதிவிட்டு தப்பியோடிய சந்தேக நபர்களை, போலீஸார் பொது மக்களின் உதவியுடன் துரத்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

அரசு ஊழியர்களை கடமையைச் செய்ய விடாமல் இடையூறு விளைவித்தல், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல், சந்தேகத்திற்குரிய பொருட்கள் மற்றும் போதைப்பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!