Latestஉலகம்

ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல்; ஒருவர் பலி, 11 பேர் காயம்

சவூதி அரேபியா, அக்டோபர் 12 – சவூதி அரேபியாவின் ரியாத் (Riyadh) நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் (King Khalid International Airport) மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானியர் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலின்போது விமான நிலையத்தில் தீப்பற்றியதுடன், அருகே ஏவப்பட்ட ஏவுகணையையும் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்தனர். இதையடுத்து, விமான நிலையத்தின் செயல்பாடுகள் திங்கட்கிழமை இரவு 9 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

யேமனைத் தளமாகக் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள் (Houthis) தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து தாக்குதல்களை நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதற்கு முன்னதாக, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 309 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!