
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்டு 23 – தலைநகர், புக்கிட் பிந்தாங்கில், பெண்கள் சிலர் அரை நிர்வாணமான கோலத்தில் நடமானடிய செயல், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புக்கிட் பிந்தாங்கிலுள்ள, ‘Buy & Save’ கடைக்கு வெளியே, அரை குறை ஆடையுடன், அவர்கள் நடனமாடும் காணொளி டிக் டொக்கில் வைரலாகியுள்ளது.
அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, “Ki dance re vhai” எனப்படும் அந்த நடனம் படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை, பொது இடத்தில் நடத்த எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என இணைய பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“மலேசியாவிற்கு என்னவாக போகிறது. முன்பு மறைமுகமாக இருந்தது இப்பொழுது பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகிறது” என இணைய பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தவறு. எப்படி அனுமதி வழங்கினார்கள்?” என மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், சுற்றுலாக அமைச்சும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.