
சிலாங்கூர், ஆகஸ்ட் 12 – சிலாங்கூர், புஞ்சாக் ஆலமிலுள்ள ஜாலான் ஆலம் சூரியா (Jalan Alam Suria, Bandar Puncak Alam) பகுதியில், கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பூட்டிய காருக்குள் 56 வயதுடைய ஆடவர் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அஸ்மான் அகமட் (Azman Ahmad) என அடையாளம் காணப்பட்ட அவரைக் கண்ட பொதுமக்கள் காரின் கதவைத் திறந்துள்ளனர். காலை 11.30 மணியளவில் தகவல் கிடைத்ததும், காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
புஞ்சாக் ஆலம் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (UiTM) மருத்துவமனை மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். அவரது உடல் மேல் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



