புதுடில்லி, மே 29 – இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வெப்பநிலை செவ்வாய்க்கிழமையன்று 49.9 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததாக அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான வெப்ப–அலை இதுவென இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. Narela மற்றும் Mungeshpur ஆகிய இரண்டு டெல்லி புறநகர் பகுதிகள் அதிகமான வெப்பநிலையைப் பதிவு செய்தன. இன்று புதன் கிழமையும் இதேபோன்ற வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் , டெல்லியின் சில பகுதிகள் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்ப அலையை எட்டியதாக அப்போது ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரிப்பது இந்தியாவுக்கு புதிதல்ல. ஆனால் காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் அடிக்கடி அதிகரித்து மற்றும் தீவிரமாகியிருப்பதாக பல ஆண்டுகால வானிலை ஆராய்ச்சியின் மூலம் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்போதைய வெப்ப நிலை மேலும் மோசமானால் புதுடில்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது அங்கு – சில பகுதிகளுக்கு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தடுக்க கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நீர் வள அமைச்சர் Atishi Marlena அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் குறித்து இந்திய வானிலைத்துறை எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், மேற்கு வங்காள மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலமான Mizoram, ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் வங்காளதேசத்தை தாக்கிய ரெமல் சூறாவளியியினால் ஏற்பட்ட கடுமையான மழையினால் 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.