ஜோகூர் பாரு, பிப் 18 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேசனல் உறுப்புக் கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவுற்றதாக அந்த கூட்டணியின் தலைவரான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
எந்தவொரு தகராறு மற்றும் தவறான புரிந்துணர்வு எதுவுமின்றி 56 தொகுதிகளுக்கான பங்கீடு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டதாக அவர் கூறினார். வழக்கமான நடைமுறையின்படி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் MACC மற்றும் திவால் துறையின் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் அடுத்துவரும் சில நாட்களில் அவர்களது பெயர்கள் அறிவிக்கப்படும் என பெர்சத்து கட்சியின் தலைவருமான முஹிடின் யாசின் தெரிவித்தார்.