பெரும்பாலான இணைய முதலீடு திட்டங்கள் ஏமாற்றக்கூடியவை என்பதால் இறுதியில் மோசடிக்கு வழிவகுக்கும் என குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப்
( Ramli Mohamaed Yoosuf ) கூறினார். சமூக வலைத்தளங்களில் விளப்பரப்படுத்தப்படும் முதலீடு வாய்ப்புகள் குறித்து மிகவும் விழிப்பாக இருக்கும்படி அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். டெலிகிராம் மற்றும்
முகநூல் போன்றவற்றில் முதலீடு தொடர்பாக வரும் விளம்பரங்கள் உண்மையானவை அல்ல . அவை ஏமாற்றும் அல்லது மோசடி நோக்கத்தை கொண்டவை என ரம்லி சுட்டிக்காட்டினார்.
முதலீடு திட்டங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த திட்டங்களில் எதுவும் சட்டப்பூர்வமானாதாக இல்லை. தங்களை முதலீடுகளின் நிபுணர்கள்போல் கருதிக்கொள்பவர்கள் வெளியிட்டுவரும் காணொளி காட்சிகள் இறுதியில் மோசடிக்கு இட்டுச்செல்கின்றன. இந்த முதலீட்டுத் திட்டங்கள் எளிதில் பணக்காரராக முடியும் என்ற தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இறுதியில் அவை பெரும் இழப்பை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடுவதாக ரம்லி கூறினார். சட்டப்பூர்வமான முதலீடுகள் பங்கு பரிவர்த்தனை பட்டியலில் இடம் பெற்றவையாக இருக்கும். ஆனால் 300 வெள்ளியை முதலீடு செய்தால் உடனடியாக 18,000 ரிங்கிட் கிடைக்கும் என்ற வாக்குறுதி நம்பக்கூடியது அல்ல. சிலர் இதுபோன்ற திட்டங்களை நம்புவதால் எளிதில் ஏமாந்துவிடுகின்றனர் என ரம்லி தெரிவித்தார்.