Latestமலேசியா

பெரூவாஸில் டிரெய்லருடன் மோதிய எம்.பி.வி வாகனம் தீப்பிடித்தது; எம்.பி.வி ஓட்டுனர் கருகி மரணம்

பெருவாஸ், ஜூன் 11- பெருவாஸ், கம்போங் செமங்காட், ஜாலான் 9ஆவது மைலில் டிரெய்லர் லோரியுடன் ஏற்பட்ட விபத்தில் MPV வாகனம் தீப்பிடித்ததோடு அதில் சிக்கிக்கொண்ட அதன் ஓட்டுநர் கருகி மாண்டார்.

இன்று விடியற்காலை மணி 4.30க்கு நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில்
Toyota Innova வாகனத்தை ஓட்டிய அதன் ஓட்டுநர் அடையாளம் தெரியாத அளவுக்கு தீயில் கருகியதாக நம்பப்படுகிறது.

அவசர அழைப்பு கிடைத்தவுடன் பந்தாய் ரெமிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்றையின் நடவடிக்கைக்கான உதவி இயக்குநர் சபரோட்ஷி நோர் அகமட் ( Sabarodzi Nor Ahmad ) தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்றபோது அந்த MPV வாகனம் வேகமாக தீயில் எரிந்து கொண்டிருந்ததோடு 90 விழுக்காடு அழிந்துவிட்டதால் ஓட்டுநரின் உடல் முழுமையாக கருகிவிட்டதால் அடையாளம் காணமுடியவில்லை.

அவரது பாலினம் குறித்தும் தெரியவில்லையென சபரோட்ஷி கூறினார் . இந்த விபத்தில் டிரெய்லர் ஓட்டுநரான 60 வயதுடைய ஆடவர் சொற்ப காயம் அடைந்தார். சிறப்புக் கருவியினால் MPV வாகனத்தை வெட்டிய பின் ஓட்டுநரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!