Latestமலேசியா

பேங்காக்கில் அனைத்துலக சமையல் போட்டி மலேசியாவுக்கு பெருமை சேர்த்த செஃப் யுவன்.

பேங்காக், ஜூன்-2-தாய்லாந்தில் கடந்த வாரம் மே 26 ஆம் தேதி தொடங்கி
மே 30ஆம் தேதிவரை பேங்காக்கில் நடைபெற்ற Thailand Ultimate Chef Challenge 2026 என்ற அனைத்துலக சமையல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்து கொண்ட செஃப் ஷஃபிக் மற்றும் செஃப் லியோ ஆகியோருடன் இணைந்து Champion Cup வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் செஃப் யுவன்.

அதுமட்டுமின்றி, தனிநபர் பிரிவுகளிலும் சமையல் கலையில் தனித்துவமாக விளங்கிய யுவன், மேலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சமையல் கலையில் தனது திறமையை அனைத்துலக அரங்கில் மீண்டும் நிரூபித்துள்ளார்.

இதற்கு முன் அனைத்துலக சமையல் போட்டியில் ஒரு முறை வெற்றியாளராகவும், இரண்டாவது இடத்தையும் , மூன்று தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செஃப் யுவன், இந்திய இளைஞர்கள் அதிக அளவில் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் இணைவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த அனைத்துலக போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கி, முழுமையான ஆதரவும் ஊக்கமும் அளித்த Lotus’s Malaysia நிறுவனத்திற்கும் செஃப் யுவன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!