Latestஉலகம்

கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி; 25 பேர் காயம்

கொல்கத்தா, அக்டோபர்-18 – இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

வட கொல்கத்தாவில் துர்கா பூஜைக்குப் பெயர்பெற்ற Chorbagan பகுதியில் நேற்று மாலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

கனமழை பெய்ததால், துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வழிபாட்டு பந்தலுக்குள் ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் நுழைய முயன்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில், வெளியேறும் வாயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!