Latestமலேசியா

பைசால் மீது எரி திராவகம் வீசப்பட்ட சம்பவம் ; முஹமட் இம்ரான் சுரேஸ் எனும் பயனரின் சமூக ஊடகக் கணக்கு போலி

கோலாலம்பூர், மே 8 – ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர் பைசால் ஹலிம் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில், அரச தரப்பினர் தொடர்பு இருப்பது போன்ற கூற்றுகளை வெளியிட்டுள்ள முஹமட் இம்ரான் சுஸ்ரேஸ் எனும் சமூக ஊடக பயனர் ஒருவரை போலீஸ் அடையாளம் கண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

பைசாலுக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பில், தமக்கு தகவல் தெரியுமென அந்நபர் குறிப்பிட்டுள்ளதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறியிருந்தார்.

அதனால், விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்நபர் தேடப்பட்டு வருவதாக ரஸாருடின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த சமூக ஊடக கணக்கு போலியானது எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

‘முஹமட் இம்ரான் சுஸ்ரேஸ்’ என்ற பெயரைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ஒரு சமூக ஊடகக் கணக்காவது இதுபோன்ற கூற்றுகளை பகிர்ந்துள்ளது. எனவே, அது போலியானது என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் முகமர் ஷூஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

எனினும், தங்களின் தொடர் தேடலுக்கு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தின் உதவியுடன் செயல்படவுள்ளதாக இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இதனிடையே, கால்பந்து ஆட்டக்காரர்களின் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை தங்கள் கைகளில் எடுத்து சமூக ஊடகங்களில் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!