Latest

நாட்டின் எதிர்கால திசையை வரையறுக்க மாநாடு நடத்தும் Ikatan Prihatin Rakyat எதிர்கட்சி கூட்டணி

கோலாலம்பூர், டிசம்பர்-4,

11 கட்சிகள் இணைந்து உருவாக்கிய அதிகாரப்பூர்வமற்ற எதிர்க்கட்சிக் கூட்டணியான Ikatan Prihatin Rakyat அல்லது IPR, நாட்டின் எதிர்கால திசையை வரையறுக்க ஒரு தேசிய மாநாட்டை நடத்தவுள்ளது.

‘Konvensyen Rakyat – Save Malaysia’ அதாவது ‘மக்கள் மாநாடு – மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற கருப்பொருளில் அடுத்தாண்டு தொடக்கத்தில் அது நடைபெறும் என, IPR செயலகத் தலைவர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

இம்மாநாடு, மலேசியர்கள் இன்று எதிர்நோக்கி வரும் பொருளாதார, வாழ்க்கைச் செலவின உயர்வு, கல்வி மாற்றங்கள், மற்றும் நாட்டின் நீண்டகால வளர்ச்சி போன்ற முக்கியப் பிரச்னைகளை மையப்படுத்தும் என்றார் அவர்.

மாநாடு நடைபெறும் தேதி மற்றும் இடம் போன்ற தகவல்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPR கூட்டணித் தலைவர்கள், இந்த மாநாடு மடானி அரசாங்கத்திற்கு மாற்று வழித்தடமாக செயல்படும் ஒரு ஒற்றுமையான கொள்கை திசையை உருவாக்கும் முயற்சியாகும் என கூறுகின்றனர்.

ஆனால் அரசியல் விமர்சகர்களோ, இது ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியாக உருவெடுக்கக்கூடிய அறிகுறி என்றாலும், கூட்டணியின் நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் தான் இதன் விளைவுகளை தீர்மானிக்கும் என கூறுகின்றனர்.

மக்களைப் பாதிக்கும் விஷயங்களுக்குப் போராடும் நோக்கில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி Dr பி. ராமசாமியின் உரிமை, பி. வேதமூர்த்தியின் MAP உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து கடந்த ஆகஸ்ட் வாக்கில் IPR-ரை அமைத்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!