
கோத்தா பாரு, மே 5- கடத்தல் சிகரெட்டுகள் கண்டுப்பிடிக்காமல் இருப்பதற்காக
போலி பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பொது நடவடிக்கைப் படையினர் கோத்தா பாரு, Kampung Pantai Sabakக்கில் இரவு மணி 9.30க்கு மேற்கொண்ட நடவடிக்கையில் , இரண்டு கார்களில் இருந்து 500,000 சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்ததோடு, ஒருவர் கைது செய்யப்பட்தாக பொது நடவடிக்கை பிரிவின் தென் கிழக்கு படையின் கமாண்டர் முதிர்நிலை உதவி கமிஷனர் அகமட் ராட்ஸி உசேய்ன் தெரிவித்தார்.
அமலாக்கப் படையினரின் இருப்பை உணர்ந்த சந்தேக நபர்கள், இரு வாகனங்களையும் கடத்தல் பொருட்களையும் கைவிட்டுவிட்டு, சம்பவ இடத்திலிருந்து படகில் தப்பிச் சென்றனர்.
கடத்தப்பட்டதாக நம்பப்படும் சுமார் 900,000 ரிங்கிட் மதிப்புள்ள, மொத்தம் 500,000 சிகரெட்டுகள் அடங்கிய 50 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் பறிமுதலில் இரண்டு வாகனங்களும் அடங்கும், இதனால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 960,000 ரிங்கிட்டாகும் என அகமட் ராட்ஸி கூறினார்.



