
ஈப்போ, ஆகஸ்ட் 14 – 49 வயதான ஆடவர் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் 26 வயதுடைய பெண்ணுக்கு காயம் ஏற்படுத்திய வழக்கில் ஈப்போ நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது சந்தேக நபர் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி m, பத்து காஜா பெர்டானாவிலுள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்தப் பெண் தனது இரண்டு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்ததாகவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் சபந்தப்பட்ட ஆடவருக்கு 8,000 ரிங்கிட் பிணை வழங்கி, மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகவும், கடப்பிதழை ஒப்படைக்கவும், சாட்சிகளைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு செப்டம்பர் 23ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



