ஆக்ரா, அக்டோபர்-13,
இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் காதல் வலையில் விழுந்த மகளைக் கொல்வதற்காகக் கூலிக்கு ஆள் வைத்த தாய், கடைசியில் அவனாலேயே பலியான துயரம் நிகழ்ந்துள்ளது.
காணாமல் போன 42 வயது அல்கா எனும் அம்மாது வயல்வெளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு, போலீஸ் விசாரணை நடத்திய போது உண்மை வெளியானது.
வெளியூரில் உறவினர் வீட்டுக்கு அனுப்பியிருந்த 17 வயது மகள் அங்கு காதல் வயப்பட்ட விஷயம் தெரிந்ததால் அவமானமடைந்த அல்கா, மகளென்றும் பாராமால் அவளைக் கொலைச் செய்த முடிவுச் செய்துள்ளார்.
அதன்படி 10 ஆண்டுகள் சிறையிலிருந்த சுபாஷ் சிங் என்பவனை அணுகி, 50,000 ரூபாய் பணத்தைக் கொடுத்து மகளைத் தீர்த்துக் கட்டச் சொல்லியுள்ளார்.
ஆனால், அந்த சுபாஷ் சிங் தான், தனது மகளின் காதலன் என்ற உண்மை அவருக்குத் தெரியவில்லை.
சுபாஷோ, நடந்தவற்றைக் காதலியிடம் கூற, புதியத் திருப்பமாக இருவரும் சேர்ந்து அல்காவைக் கொல்வதற்குத் திட்டம் போட்டுள்ளனர்.
கடைசியில் ஆக்ராவுக்கு அழைத்துச் சென்று அல்காவைக் கொலையும் செய்தனர்.
அல்காவின் மகள் மற்றும் அவர் கூலிக்கு ஆள் வைத்த சுபாஷ் இருவரையும் கைதுச் செய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.