Latestமலேசியா

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே முதன்மை: லிங்கியில் உதவிகளையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் தொடர அமினுடின் வாக்குறுதி

லிங்கி, ஜூலை-24-நெகிரி செம்பிலான், லிங்கி சட்டமன்றத் தொகுதி வாழ் மக்களுக்கு இன்னமும் ஏராளமான உதவிகள் தேவைப்படுகின்றன; முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளும் அவர்களில் அடங்குவர் என, 16-ஆவது மாநிலத் தேர்தலில் அத்தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண்.

ஒரு வார கால தேர்தல் பிரச்ச்சாரங்களுக்காக தொகுதியை வலம் வந்ததில், அவ்விவரங்களைத் தாம் தெரிந்துகொண்டதாக மந்திரி பெசாருமான அவர் சொன்னார்.

2022 பொதுத் தேர்தலில் போர்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் தாம் வென்ற போது, அதற்குட்பட்ட இந்த லிங்கி சட்டமன்றத்தில் மட்டும் சுமார் 400 வாக்குகள் வித்தியாசத்திலேயே தாம் முன்னிலைப் பெற்றதை அமினுடின் நினைவுகூர்ந்தார்.

அப்போதிருந்த வாக்காளர்களின் மனோநிலையும் நடப்பு நிலவரமும் வேறுபட்டுள்ளது என்றாலும், தாம் கவனமாகவே இந்த மாநிலத் தேர்தலை அணுகுவதாக அவர் சொன்னார்.

ஒருவேளை லிங்கியில் வெற்றிப் பெற்றால், அது தொழிற்பேட்டையாக உருமாற்றம் காண்பது முதல், மாற்று வழிக்கான வருமானம் உட்பட மீனவர் நலன் காப்பு, கோழி வளர்ப்பை நவீனமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென்றா அவர்.

நடப்பில் 2 வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் பலனாக 6 மாதங்களில் வெள்ளப் பிரச்னை இல்லையென்றும் அவர் கூறினார்.

லிங்கிக்கான மக்கள் பிரதிநிதியாகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், இதுபோன்ற பல்வேறு அனுகூலங்கள் தொடரும் என அமினுடின் வாக்குறுதியளித்தார்.

கடந்த முறை சிக்காமாட் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்ற அமினுடின், இம்முறை பக்காத்தானுக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் யுக்தியாக இந்த லிங்கிக்குத் தொகுதி மாறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!