
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர், தனது முதல் கடப்பிதழ் அளவிலான Foldable அதாவது மடிக்கக்கூடிய திறன்பேசியான iPhone Duo-வை Apple அறிமுகப்படுத்தியுள்ளது.
புத்தகம்போல் திறக்கக்கூடிய இந்தத் திறன்பேசி, மூடிய நிலையில் 5.4 அங்குலத் திரையையும், திறந்தவுடன் 7.6 அங்குலத் திரையையும் கொண்டுள்ளது. இதுவரை வெளியான iPhone-களிலேயே இதுதான் மிகப்பெரிய திரையாகும்.
சக்திவாய்ந்த A20 Pro சிப், ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளைப் பயன்படுத்தும் வசதி, Apple Pencil ஆதரவு, பக்கவாட்டில் Touch ID, இரண்டு 48 மெகாபிக்சல் பின்புறக் கேமராக்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். மேலும், தண்ணீர் மற்றும் தூசியைத் தாங்கும் IP68 பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் iPhone Duo விலை 256GB மாடலுக்கு RM9,499-லிருந்து தொடங்குகிறது. 2TB மாடலின் விலை RM15,499. Star White, Night Sky ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கும்.
அக்டோபர் 16 இரவு 8 மணிக்கு முன்பதிவு தொடங்கி, அக்டோபர் 23 முதல் மலேசியாவில் விற்பனைக்கு வருகிறது. Foldable வகை திறன்பேசி சந்தையில் Samsung, Huawei நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் நிலையில், Apple-இன் வருகை புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.
Tim Cook-ஐ அடுத்து Apple நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றுள்ள John Ternus-சின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த iPhone Duo, சந்தையில் பெரும் வரவேற்பை பெற்று நிறுவனர் SteveJobs-இன் சாதனை சகாப்தத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.



