கோலாலம்பூர், ஜூன் 6 – Parallel Pathway எனப்படும் இருதய நிபுணத்துவ சிறப்பு பயிற்சி திட்டத்தின் மூலம் கல்வி தகுதியை பெற்ற மருத்துவர்கள் அதனை பதிவு செய்யும் சிக்கலை தீர்ப்பதற்கு 1971ஆம் ஆண்டின் மருத்துவ சட்டத்தித்தில் (50 ஆவது சட்டம் ) திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சும் மற்றும் உள்நாட்டு உயர்கல்வி நிலையங்கள் மருத்துவ முதுகலை கல்வி திட்டங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இருதய சிகிச்சை நிபுணத்துவ பயிற்சியின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுகாதார வசதிகளில் நிபுணத்துவ சேவைகளின் தேவையை பூர்த்தி செய்ய அதிக நிபுணர்களை உருவாக்க உதவுகிறது என சுகாதார அமைச்சர் டாக்டர் Dzulkefly Ahmad தெரிவித்திருக்கிறார்.
இந்த திருத்தங்களுக்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலை பெற்ற பின், 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தில் , திருத்தத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மூலம், இரண்டு நிபுணத்துவ பயிற்சிகளும் சட்டக் கண்ணோட்டத்தில் மிகவும் முறையாகச் செயல்படுத்தப்படலாம்.
சிறப்பு நிபுணத்துவ பயிற்சியை முடித்த மருத்துவர்கள் MMC எனப்படும் மலேசிய மருத்துவக் மன்றத்தின் கீழ் உள்ள NSR தேசிய நிபுணத்துவ பதிவேட்டில் மருத்துவ நிபுணர்களாகப் பதிவு செய்ய முடியும். இதனால் எழும் எந்தப் பிரச்னையையும் உடனடியாகத் தீர்க்க எங்களால் முடியும். இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டவுடன், பயிற்சி மற்றும் சேவைகளின் தரம், பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் திறன் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்படுவதை சுகாதார அமைச்சு உறுதி செய்யும் என்று டாக்டர் Dzulkefly கூறினார்.