Latestமலேசியா

மருத்துவ, பல் மருத்துவ & மருந்தக அதிகாரிகளுக்கான 3,950 காலியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பும் KKM; விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

புத்ராஜெயா, ஜூலை 27 – சுகாதார அமைச்சு (KKM) மொத்தம் 3,950 வேலைக் காலியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பவுள்ளது.

3,200 மருத்துவ அதிகாரிகள், 350 பல் மருத்துவ அதிகாரிகள், 400 மருந்தக அதிகாரிகளை அக்காலியிடங்கள் உட்படுத்தியுள்ளன.

அரசுத் துறையில் நிரந்தர வேலை நியமனத்திற்கான புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் வரை, பிப்ரவரி 1 முதல் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் வேலைக்கு ஆள் எடுக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப இது அமைகிறது.

ஒப்பந்த முறையில் வேலையில் சேருவோர், தங்களின் அடைவுநிலையைப் பொருத்து வேலையில் நிரந்தரமாக்கப்படலாம்.

ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஜூலை 31 வரை நீடிக்கும்.

ஆர்வமுள்ளோரும், விண்ணப்பிக்கத் தகுதிப் பெற்றோரும் பொதுச் சேவை ஆணையத்தின் இணைய அகப்பக்கத்தை https://spa9.spa.gov.my வலம் வரலாம்.

அங்கு கேட்கப்படும் எல்லா விவரங்களையும் முழுமையாகப் பூர்த்திச் செய்து, விண்ணப்பத்திற்கான கடைசி நாள் முடிவதற்குள் அனுப்பி விட வேண்டும்.

ஒப்பந்த விதிமுறைகளைப் பூர்த்திச் செய்தும் இடம் கிடைக்காத விண்ணப்பத்தாரர்கள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவர் என KKM அறிக்கையொன்றில் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!