
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 –சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஓர்கா எனும் திமிங்கலம் பெண்ணொருவரைத் தாக்கி கொன்றதாகக் கூறப்படும் வீடியோ முற்றிலும் போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்களில் பரவிய அந்தக் காணொளியில், பாதிக்கப்பட்டவரை அந்த திமிங்கலம் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, இப்படியான தாக்குதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும் “ஜெசிகா ராட்க்ளிஃப்” என்ற பெயரில் எந்தவொரு ஓர்கா பயிற்சியாளரும் இல்லையென்றும் உள்ளூர் ஊடகம் அறிவித்துள்ளது.
இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் (AI) வழி உருவாக்கிய காணொளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜெசிகா ராட்க்ளிஃப்” சம்பவம் முற்றிலும் கற்பனை மட்டுமே என்றும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையோ உண்மையான ஆதாரமோ இல்லாத நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான செய்திகளை மக்கள் தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.