Latestமலேசியா

மஸ்ஜித் இந்தியா அருகே பிக்அப் வாகனம் ஆற்றில் விழுந்தது; அறுவர் உயிர் தப்பினர்

கோலாலம்பூர், மார்ச் 23 – இன்று அதிகாலை கோலாலம்பூரில் மஸ்ஜித் இந்தியா அருகே ஒரு பிக்கப் டிரக் ஆற்றில் கவிழ்ந்ததில், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட அறுவர் உயிர் தப்பினர்.

அதிகாலை மணி 5.26 அளவில் இந்தச் சம்பவம் குறித்த அவசர அழைப்பு பெற்றதைத் தொடர்ந்து, தித்திவாங்சா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தகவல் வெளியிட்டது.

ஆற்றில் வாகனம் கவிழ்ந்திருப்பதைக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் கண்டவுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரையும் வெற்றிகரமாக மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் மீட்புக் குழுவினர், போலீஸ், மலேசிய பொது தற்காப்புப் படை ஆகியோர் இன்று நண்பகல் மணி 12.15 அளவில் அந்த பிக்அக் வாகனத்தை ஆற்றிலிருந்து முழுமையாக மீட்டனர்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!