Latestமலேசியா

மீண்டும் நீல நிறமாக மாறிய பேராக் ஆற்றுநீர்; ஆய்வறிக்கைக்காக காத்திருக்கும் மாநில அரசு

ஈப்போ, ஜூலை 13 – பேராக், கெரிக் (Gerik) அருகேயுள்ள கம்போங் புக்கிட் அமரிக்கான் (Kampung Bukit Amarika) பகுதியிலிருக்கும், சுங்கை பேராக் (Sungai Perak) ஆற்று நீர் மீண்டும் நீல நிறமாக மாறிய சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வறிக்கை கிடைத்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரானி முகமட் (Datuk Seri Saarani Mohamad) தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கனிம மற்றும் புவியியல் துறை (JMG), சுற்றுச்சூழல் துறை (JAS) ஆகியவை சம்பவ இடத்திற்குச் சென்று நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றன. ஆற்றில் மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் நச்சுப் பொருட்களா அல்லது சேறும் மண்ணும் மீன்களின் செவுள்களை அடைத்ததால் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தனவா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், ஆற்றில் உள்ள மீன்களை உணவாக உட்கொள்வது பாதுகாப்பானதா என்பதையும் பரிசோதித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் இதற்கு முன்பும் 2019 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் பதிவாகியிருந்ததாக சாரானி தெரிவித்தார். குறிப்பாக, 2025-ஆம் ஆண்டு கிரிக், கம்போங் சுங்கை பாப்பான் ( Kampung Sungai Papan) பாலம் அருகே ஆற்றுநீர் நீல நிறமாக மாறியதற்கு, சுரங்கத் தொழில் நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கக்கூடிய கன உலோகங்கள் அல்லது சில இரசாயனப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (NRES) தெரிவித்திருந்தது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஹுலு பேராக் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மூன்று சுரங்க நிறுவனங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. தற்போதைய சம்பவத்தின் உண்மையான காரணம் குறித்து மேற்கொள்ளும் ஆய்வின் அறிக்கை கிடைத்த பிறகே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!