Latestமலேசியா

முதலீட்டுத் திட்ட மோசடி; 5.9 மில்லியன் ரிங்கிட்டை இழந்த காஜாங் குத்தகையாளர்

ஷா ஆலாம், ஜனவரி-9, இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி 5.9 மில்லியன் ரிங்கிட் பணத்தை பறிகொடுத்துள்ளார் சிலாங்கூரைச் சேர்ந்த ஒரு குத்தகையாளர்.

Facebook-கில் “Davidson Kempner Capital Management” என்ற நிறுவனத்தின் விளம்பரத்தால் கவரப்பட்ட 58 வயது அவ்வாடவர், கடந்தாண்டு செப்டம்பரில் அத்திட்டத்தில் இணைந்துள்ளார்.

தொடக்கமாக Apple Store-ரில் A-Trade என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

பிறகு, கொடுக்கப்பட்ட 8 வங்கிக் கணக்குகளுக்கு 30 தடவையாக மொத்தம் 5.9 மில்லியன் ரிங்கிட்டை அவர் மாற்றியுள்ளார்.

இது அத்தனையும் நடந்தது செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலாகும்.

ஆனால் சொல்லியபடி போட்டப் பணத்திற்கு இலாப ஈவு வராததால், சந்தேகத்தில் செவ்வாய்க்கிழமையன்று அவர் காஜாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அம்மோசடி குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!