Latestமலேசியா

முழுக் கருங்கல் ஆலயமாக மாறும் செந்தூல் காளியம்மன் ஆலயம்: நிதி திரட்ட தூயத் தங்க நாணயத் திட்டம் அறிமுகம்

கோலாலாம்பூர், ஜூன்-4-கோலாலம்பூர், செந்தூல் காளியம்மன் ஆலயம் முழுமையாக கருங்கல் கொண்டு பிரம்மாண்டமாகப் புதுப்பிக்கப்படவுள்ளது.

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஆலயத் பக்தரும் நிதி திரட்டும் ஒருங்கிணைப்பாளருமான CR கார்த்திக் மற்றும் ஆலயத் தலைவர் சுரேந்திரன் சந்திர சேகரன் ஆகியோர் இத்கவலை அறிவித்தனர்.

இத்திருப்பணிக்கான நிதி திரட்டும் நோக்கில், அம்மனின் திருவுருவம் பொறிக்கப்பட்ட 99.9% தூய தங்க நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாணயத்தின் விலை RM501 ஆகும்.

இதையடுத்து நிதி திரட்டும் அடுத்த திட்டமாக, குறைந்தபட்சம் 60,000 ரிங்கிட் அல்லது அதற்கும் மேற்பட்டு நிதி கொடுக்கும் ஒரு நபருக்கு 70 கிராம் தூய தங்கத்திலான காளியம்மன் சிலை வழங்கப்படவுள்ளது.

இத்தங்கச்சிலை இன்று ஜூன் 4 முதல் 12-ஆம் தேதி வரை ஆலயத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஜூன் 13-ஆம் தேதியன்று சிலையைப் பெறுபவரின் பெயர் அறிவிக்கப்படும்.

இதனிடையே கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்திலும் ஆலயம் தினசரி திறந்திருக்கும்; வழக்கமான அன்னதானமும் தொடரும்.

அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளும் ‘Persatuan Penganut Dewi Sri Mahakaliamman’ என்ற பெயரிலான Affin Bank ( 100340183503)வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று இந்த ஆலயம் மலேசியாவிற்கு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் வாழும் இந்து மக்களிடையே பெரும் புகழ்பெற்ற சக்தி தலமாக அறியப்படுகிறது.

அம்மனின் அருளாலும், பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், செந்துல் காளியம்மன் ஆலயம் இன்று மலேசியாவின் முக்கியமான சக்தி தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

மேல் விவரங்களுக்கு ஆலய நிர்வாகத்தை 0128101586 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!