
தம்பின், ஜூலை-22-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தாங்கள் போட்டியிடாத 25 தொகுதிகளில், Barisan Nasional வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு Perikatan Nasional தனது உறுப்பினர்களுக்கு ஆதரவாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
மாநில அரசாங்கத்தை அமைப்பதில் BN-PN -னும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய, கூட்டணியின் உயர்மட்டத் தலைமையின் இந்த அறிவுறுத்தலை PN உறுப்புக் கட்சிகளும் உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என PN பொதுச் செயலாளர் Takiyuddin Hassan கேட்டுக் கொண்டார்.
நெகிரி செம்பிலானில் PN கூட்டணி போட்டியிடும் 11 தொகுதிகளில் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு BN தலைவர் Ahmad Zahid Hamidi தமது உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அதே போல் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து PN-னின் இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.
தம்பின் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள Pas உறுப்பினர்கள், அங்குள்ள Gemencheh, Gemas, Repah ஆகிய மூன்று சட்ட மன்றத் தொகுதிகளிலும் ம.சீ.ச வேட்பாளர் உட்பட BN மற்றும் PN ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரிக்குமாறு Pas கட்சியின் பொதுச் செயலாளருமான Takiyuddin கேட்டுக் கொண்டார்.
ஜோகூர் தேர்தலின் போது Pakatan Harapan-னை எதிர்க்குமாறு கட்சி வழங்கிய அறிவுறுத்தலுக்கு ஏற்ப, PAS உறுப்பினர்களும் BN வேட்பாளர்களை ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். நெகிரி செம்பிலான் தேர்தலுக்கான BN-PN உடன்பாடு, வேட்புமனுத் தாக்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன் எட்டப்பட்டது என்பதையும் Takiyuddin சுட்டிக் காட்டினார்.



