Latestமலேசியா

சுங்கை பூலோவைச் சேர்ந்த 308 மாணவர்களுக்கு RM113,500 உயர்கல்வி உதவி; ரமணன் தலைமையில் மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைக்க தொடரும் முயற்சி

சுங்கை பூலோ, செப்டம்பர்-5,சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 308 மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் தங்களது படிப்பைத் தொடங்குவதற்காக மொத்தம் RM113,500 மதிப்பிலான ஆரம்ப உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

பண்டார் பாரு சுங்கை பூலோவில் உள்ள டேவான் மெராந்தி U20 அரங்கில் நடைபெற்ற ‘PTPK Care விழா’வில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனைப் பிரதிநிதித்து அவரது அரசியல் செயலாளர் ஐசுடின் பின் அப்துல் கப்பால் இந்த நிதியுதவிகளை வழங்கினார்.

அசாசி, மெட்ரிகுலேஷன், STPM, டிப்ளோமா, TVET சான்றிதழ் மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடங்கும் மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.

மாணவர்கள் உயர்கல்வியைத் தொடங்கும்போது அவர்களது குடும்பங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையைக் குறைப்பதே இந்த உதவியின் நோக்கமாகும்.

திறன் மேம்பாட்டு நிதி நிறுவனமான PTPK ஏற்பாடு செய்த இவ்விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

PTPK தகவல் மையம், கோரப்படாத பணத்திற்கான WTD சேவை மையம், ரஹ்மா மலிவு விற்பனை, இலவச மருத்துவப் பரிசோதனை, மோட்டார் சைக்கிள் என்ஜின் எண்ணெய் மாற்றம், இலவச முடித் திருத்தம், இரத்ததான முகாம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டன.

TVET தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் கல்வி நிதியுதவிகள் மூலம் அரசாங்கச் சேவைகளை மக்களுக்கு அருகில் கொண்டு சேர்ப்பதுடன், நாட்டின் மனிதவள மேம்பாட்டை அனைவருக்குமானதாக மாற்ற KESUMA மற்றும் PTPK தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!