Latestமலேசியா

2027 முதலாம் ஆண்டு தமிழ் பாடநூல் “மிகக் கடினமா?” உடனடி சீரமைப்பு கோரி கல்வி அமைப்புகள் முக்கிய கலந்துரையாடல்

பெட்டாலிங் ஜெயா, செப். 5 – 2027ஆம் ஆண்டு அறிமுகமாகவுள்ள முதலாம் ஆண்டு தமிழ் மொழி பாடநூல் மற்றும் பாடத்திட்டத் தர ஆவணத்தில் சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அது குறித்து ஆராய கலந்துரையாடல் ஒன்று சிலாங்கூர் தமிழ்க்கல்வி மேம்பாட்டு நடுவத்தின் ஏற்பாட்டில் இன்று பெட்டாலிங் ஜெயா தமிழ் அறவாரியத்தில் நடைபெற்றது.

“மலேசியக் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள முதலாம் ஆண்டு தமிழ் மொழி பாடத்திட்டத் தர ஆவணமும், 2027 தமிழ் மொழி பாடநூலும் மிகவும் கடினமானதாகவும், கற்றல்-கற்பித்தல் கோட்பாடுகளுக்கு எதிர்மறையாகவும் இயற்றப்பட்டுள்ளன; இவை உடனடியாகச் சீரமைக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்” எனும் தலைப்பில் பல்வேறு தமிழ் கல்வி அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துரையாடினர்.

இதுகுறித்து சிலாங்கூர் தமிழ்க்கல்வி மேம்பாட்டு நடுவத்தின் செயலாளர் மு. முத்துசாமி வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்க் கல்வி ஆர்வலர்களின் கோரிக்கைகளை கல்வி அமைச்சு சீரிய முறையில் பரிசீலிக்கும் என கலந்துரையாடலில் கலந்து கொண்டோரின் நம்பிக்கையாக இருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!