
கெடா, செப்டம்பர் -3-புத்ரா MIC கெடா மாநிலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொதுக்கூட்டம் சிறப்பாகவும், திட்டமிட்டப்படியும் நடைபெற்றது. கெடா மாநில புத்ரா MIC தலைவர் சகோதரர் டினேஷ்குமரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை, கெடா மாநில MIC துணைத் தலைவரான மாண்புமிகு டத்தோ டாக்டர் கலை அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மொத்தம் 135 பேர் கலந்துகொண்டனர். இதில் புத்ரா MIC கெடா மாநிலத்தைச் சேர்ந்த 110 உறுப்பினர்களுடன், கெடா மாநில MIC மற்றும் தேசிய புத்ரா MIC அமைப்புகளின் 25 தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
2024ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தில் இரண்டு புத்ரா MIC பிரிவுகள் மட்டுமே செயற்பாட்டில் இருந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட அமைப்பின் மறுசீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் அனைத்து பிரிவுகளிலும் செயற்பாட்டுடன் கூடிய புத்ரா MIC தலைவர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இது மாநில அளவில் புத்ரா MIC அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வலுப்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
இதனிடையே, 2025 முதல் 2026ஆம் ஆண்டு வரையில் மட்டும், கெடா மாநில இந்திய இளைஞர்களின் கல்வி உதவியாக மொத்தம் RM70,000 நிதியுதவியைப் பெற்றுத்தருவதில் புத்ரா MIC கெடா முக்கியப் பங்காற்றியுள்ளது.
இதன் மூலம் புத்ரா MIC என்பது வெறுமனே ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கல்வி, இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளிலும் நேரடியாகப் பங்களித்து வருகிறது என்பது தெளிவாகிறது.
மேலும், MIC மத்திய செயற்குழு உறுப்பினர் சகோதரர் S. Suhan, 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களைக் கொண்ட Black Lion FC Kedah கால்பந்து அணிக்கு RM1,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.

இத்தகைய ஆதரவுகள் இளைஞர்களின் திறமைகளையும் விளையாட்டுத் துறையில் அவர்களின் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.
புத்ரா MIC கெடா மாநிலத்தின் இவ்வாண்டு பொதுக்கூட்டம், உறுப்பினர் திரட்டல், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் இளைஞர்களுக்கான சமூகச் சேவை ஆகிய மூன்று முக்கியத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
தொடர்ந்து இதே உத்வேகத்துடன் செயல்பட்டு, இளைஞர்களின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் புத்ரா MIC கெடா மேலும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கும்.



