
கொழும்பு, செப்டம்பர்-5,இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் மகனும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷே, ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 18-ஆம் தேதி வரை அவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், 2013-ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 10 விமானங்களைக் கொள்முதல் செய்ததில் நிகழ்ந்த ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பில் அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக முன்னதாக விசாரணை நடத்தப்பட்டது.
சிங்கப்பூர் வங்கி கணக்குகள் மூலமாக நாமல் ராஜபக்ஷே சுமார் 800,000 அமெரிக்க டாலர் லஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கொழும்பு லஞ்ச தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள 40 வயதான நாமல் ராஜபக்ஷே, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.



