Latestஅமெரிக்காஉலகம்

6 மாத மோதல், 18 அமெரிக்க வீரர்கள் பலி; ஆனாலும் ஈரான் மோதல் ‘சிறிய விஷயம்’ தான் என்கிறார் ட்ரம்ப்

வாஷிங்டன், செப்டம்பர்-5,ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் “சிறிய விஷயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

​வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் (J.D. Vance) கூற்றை ஆதரிக்கும் வகையில், இது முழு அளவிலான போர் அல்ல; ஒரு “இராணுவ மோதல்” மட்டுமே எனத் தெரிவித்தார்.பலர் இதனைப் போர் என்கின்றனர். ஆனால் இது போர் அல்ல என்றார் அவர்.

​இந்த மோதலில் 18 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த போதிலும், வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுடன் ஒப்பிடுகையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு என ட்ரம்ப் கூறிக் கொண்டார்.

​மேலும், அமெரிக்காவின் இந்தத் தொடர் தாக்குதல்கள் ஈரானின் அணுஆயுதத் திறனை முற்றிலும் முடக்கியுள்ளதாகவும், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தற்போது தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

6 மாதங்களாக இம்மோதல் நீடிக்கும் நிலையில், ட்ரம்பின் இப்பேச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!