Latestமலேசியா

பயண விதிமுறைகளை மீறிய 108 வெளிநாட்டினர் ஜோகூர் பாருவில் பிடிபட்டனர்

ஜோகூர் பாரு, ஜூலை-22-ஜோகூர் பாருவில், பயண விதிமுறைகளை மீறிய 108 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் வணிகம் நடத்தி வந்தவர்களும் அடங்குவர் என ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குனர் Datuk Mohamad Rusdi Mohamad Darus தெரிவித்தார்.

Taman Sri Bahagia பகுதியில் வெளிநாட்டினரால் நடத்தப்படும் கடைகளைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறையும் மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து உணவகங்கள், கைப்பேசிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தின. அச்சோதனையின் போது சம்பந்தப்பட்ட வெளிநாட்டினரின் பயண ஆவணங்கள், அனுமதிச் சீட்டுகள், உரிமங்கள் பரிசோதிக்கப்பட்டன.

அதில் பல்வேறு குடிநுழைவு விதிமீறல்கள் தொடர்பாக 18 முதல் 49 வயதுக்குட்பட்ட 101 ஆண்களும் ஏழு பெண்களும் கைது செய்யப்பட்டதாக Mohamad Rusdi கூறினார்.

அவர்கள் அனைவரும் இந்தோனேசியா, நேபாளம், இந்தியா, மியன்மார், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். விசாரணைக்கு உதவும் வகையில், அவர்கள் Setia Tropika குடிநுழைவு தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், சாட்சிகளாக இருக்குமாறு உள்ளூர்வாசிகள் இருவருக்கு சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் Mohamad Rusdi குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!