
மெக்சிகோ, அக்டோபர் 15 – மெக்சிகோவில் 96 வயது பெண் ஒருவர், தம்மைவிட 78 வயது இளையவரான 18 வயது இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மணமக்களின் அடையாளங்கள் வெளியிடப்படாத நிலையில், தேசிய புள்ளிவிவர மற்றும் புவியியல் நிறுவனம் (INEGI) வெளியிட்ட திருமணப் பதிவுகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், மெக்சிகோவில் 96 வயது பெண் ஒருவர் 19 வயது இளைஞரையும், மற்றொரு மாநிலத்தில் 90 வயது ஆண் ஒருவர் 18 வயது பெண்ணையும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 71 விழுக்காட்டினர் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை என்றும், இருவருக்கும் இடையிலான முதிர்ச்சி, வாழ்க்கை இலக்குகள் மற்றும் உணர்வுப்பூர்வமான இணக்கமே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளனர்.



