Latestமலேசியா

மெர்சிங்கில் காருக்குள் கசமுசா; மலேசிய ஆடவரும் பாகிஸ்தான் இளைஞரும் கைது

மெர்சிங், மார்ச்-23-ஜோகூர், மெர்சிங்கில் ஒரு பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சந்தேகத்திற்கிடமாக ‘குலுங்கியதை’ கவனித்த இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள், அதனுள்ளே இருந்த இரு ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளனர்.

ஒழுங்கீனச் செயல்களுக்கு எதிராக ஹரி ராயா முதல் நாளன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்தக் கார் அதிகாரிகளின் கண்களில் பட்டது.

அருகில் சென்று விசாரித்தபோது, காரின் உள்ளே இருந்த இருவரும் அரை நிர்வாணமாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ந்துபோயினர்.

உள்ளூரைச் சேர்ந்த அந்த 30 வயது ஆடவரும், 20 வயதிலான பாகிஸ்தான் இளைஞரும் உடனடியாக கைதுச் செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

இருவரும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான செயலி மூலமாக ஒரு வாரத்திற்கு முன்புதான் அறிமுகமானார்கள்.

இந்நிலையில், ஒழுங்கீனச் செயலுக்கு ஹோட்டலுக்குச் செல்ல விருப்பம் இல்லாததால், காருக்குள்ளேயே ‘முடித்துக் கொள்ள’ அவர்கள் முடிவுச் செய்துள்ளனர்.

எந்தவொரு கட்டணமும் இல்லாமல் பரஸ்பர விருப்பத்தின் பேரிலேயே இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் கூறிக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!