Latestஉலகம்

ரியாத்தில் அமெரிக்க தூதரகம் மீது டுரோன்களால் ஈரான் தாக்குதல்; உயிர் சேதம் ஏதுமில்லை

ரியாத், மார்ச் 3- ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இரண்டு டுரோன்களால் தாக்கப்பட்டதால், குறைந்த அளவிலான தீ விபத்தும், சில பொருள் சேதமும் ஏற்பட்டதாக, இன்று X பதிவில், சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

தொடக்கக் கட்ட மதிப்பீட்டை மேற்கோள் காட்டி, சவுதி அரேபியாவின் தற்காப்பு அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டது.

சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகளில் ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பலத்த குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், தீப்பிழம்புகள் காணப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை நன்கு அறிந்த மூன்று பேர் தெரிவித்தனர்.

வெளிநாட்டு தூதரகங்களைக் கொண்ட ரியாத்தின் தூதரக குடியிருப்பு பகுதியில் கரும்புகை எழுந்ததாகத் தெரிகிறது. காலை நேரத்தில் கட்டிடம் காலியாக இருந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!