Latest

ரோந்து பிரிவு போலீசை அவமானப்படுத்துவதற்காகவே வெளியிடப்பட்ட காணொளி; வழக்கு பதிவு செய்த போலீசார்

சுபாங் ஜெயா, நவம்பர் 11 – அண்மையில், சமூக வலைதளங்களில் பரவி வந்த சில காணொளிகளில், கடமையில் இருந்த மோட்டார் ரோந்துப் பிரிவு (URB) போலீஸ் அதிகாரிகள் அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வாகன பரிசோதனையின் போது பதிவு செய்யப்பட்ட அக்காணொளியில் போலீசார் விதிமுறைகளுக்கு இணங்கி பரிசோதனையை நடத்தியதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களைப் பின்னர் விடுவித்தனர் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் (Asisten Komisioner Wan Azlan Wan Mamat) தெரிவித்தார்.

அதே சமயம், உண்மை நிலையை மறைத்து, சம்பவத்தைப் பற்றிய தவறான கூற்றுகளைக் கொண்ட காணொளி வலைத்தளத்தில் பரவி வருவதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

தவறான தகவல்களைக் கொண்ட காணொளிகளை பரப்பியதற்காக, போலீசார் இவ்வழக்கினை, தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவல்துறையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், ஆதாரமற்ற கருத்துகள் அல்லது வீடியோக்களை பகிர வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டுமென்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!