
ஷா அலாம், ஜூன்-3-உலு சிலாங்கூரில் Jalan Batang Kali-Genting சாலையில்
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லோரியில்
மோதியதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 4.45க்கு நடந்த இந்த விபத்தில் லோரி ஓட்டுநரும் காயமடைந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் துணை Superintendan முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் (Mohd Asri Mohd Yunus) தெரிவித்தார்.
பஹாங் போலீஸ் துறையின் தலைமையகத்தில் தளவாடத்துறையின் தலைவராக பணியாற்றி வந்த 51 வயதான Superintendan யுஸ்லிமிஷாம் ஹசிம் (Yuslimezam Hashim) இறந்ததாக அடையாளம் கூறப்பட்டது.
கெடாவில், அலோஸ்டாரிலிருந்து பஹாங் போலீஸ் தலைமையகத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் தனியாகச் சென்று கொண்டிருந்தபோது யுஸ்லிமிஷாம் விபத்துக்குள்ளானதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் இடதுபுறம் திரும்பியபோது அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்து ஒரு லாரியுடன் மோதியதாக நம்பப்படுகிறது.
விபத்தின் தாக்கத்தால் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே Superintendan யுஸ்லிமிஷாம் மரணம் அடைந்தார்.
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 (1)-ன் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



