
ஜோகூர் பாரு, ஜூலை-20-ஜோகூர் மாநிலத் தேர்தலில் ம.இ.காவின் 100 விழுக்காட்டு வெற்றி, அந்த முதுபெரும் கட்சிக்கு மீண்டும் இந்தியர்களின் ஆதரவு அலை வீசத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது.
தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவ்வாறு கூறியுள்ளார்.
வெற்றிப் பெற்ற ம.இ.காவின் 4 வேட்பாளர்களும் திறமைமிக்கவர்கள் நல்ல சேவையாளர்கள்; எனவே தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்யும் அளவுக்கு அவர்கள் சேவையாற்றுவர் என விக்னேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அரசியல் சரிவிலிருந்து ம.இ.கா மீண்டுள்ளது.
அக்கட்சியின் 80-ஆண்டு கால சேவையை மக்கள் குறிப்பாக இந்திய வாக்காளர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஆதரவு அலை நெகிரி செம்பிலான் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார் அவர்.
பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு 25 தொகுதிகளில் வழி விட்டு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆதரவு தெரிவித்திருப்பது, ம.இ.காவின் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் விக்னேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நெகிரியில் 36 தொகுதிகளில் 2 இடங்களில் போட்டியிடும் ம.இ.கா வேட்பாளர்கள் அமோக வெற்றிப் பெற்று சடேடமன்றத்திற்குள் நுழைவர் எனவும் அவர் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.



