Latestமலேசியா

சிறுவனுக்குப் பாலியல் வன்கொடுமை: ENT மருத்துவருக்கு 7 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படிகள்

குவாலா திரங்கானு, ஜூலை-20-சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர் ஒருவருக்கு குவாலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றின் காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவ நிபுணரான 42 வயது Mohd Safwan Mohd Soffian என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 7 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

​கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில், 11 மற்றும் 12 வயதிலிருந்த சிறுவனிடம் தனியார் மருத்துவமனை ஆலோசனை அறையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகத் தொடுக்கப்பட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவ்வாடவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

​2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்ட நிலையில், சிறைத்தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளி விடுதலையான பின்னர் 2 ஆண்டுகள் போலீஸாரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!