ஷா ஆலம், அக்டோபர் 7 – கோத்த கெமுனிங்கிலுள்ள ஒரு உணவகத்தில் பணியாளர் ஒருவர் வடிகால் அருகில் இறைச்சியைக் கழுவுவதைக் கண்டு, மீண்டும் வலைத்தளவாசிகள் குமுறி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை, முகம் சுளிக்க வைக்கும் இந்த செயலைப் பணியாளர் ஒருவர் செய்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக, புகைப்படத்துடன் வலைத்தளவாசி ஒருவர் பதிவேற்றியிருந்தார்.
இதனிடையே, அன்று மாலையே அக்கடை மூடப்பட்ட அறிவிப்பு ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது.
அதில், உணவுகளை வாராந்திரமாகச் சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் மோசமடைந்த பொருட்களைத் தூக்கி எறிய வேண்டும் என்பது தங்களது வழக்கம் என்று உணவகம் தெரிவித்திருந்தது.
மேலும், கெட்டுப்போன இறைச்சியை தூக்கி எறிய வேண்டாம் என்பதற்காக தனது பணியாளர், தெருநாய்களுக்கு அதை உணவளிக்கவே, கடையின் பிற்பகுதியில் வைத்து அதை கழுவியதாகத் அவ்வுணவகம் விளக்கமளித்துள்ளது.
எனினும், பணியாளரின் அச்செயலை நியாயப்படுத்தாத அவ்வுணவகம், அது தவறு; ஆகையால்தான் அனைத்து சமையலறை ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், அந்த குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.